விதார்த், வாணிபோஜனை கைது செய்ய வேண்டும்: காவல்துறையில் அளிக்கப்பட்ட திடீர் புகார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் ஒரு கதையில் நடித்த விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விதார்த் , வாணி போஜன் நடிப்பில் உருவான ’அஞ்சாமை’ என்ற திரைப்படம் வெளியானது என்பது இந்த படம் விமர்சனம் ரீதியாக நல்ல பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து வரும் நிலையில் நீட் தேர்வு தேவையில்லை என்ற கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை நீட் தேர்வு ஏற்படுத்தி உள்ளது என்றும் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு பக்கம் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ‘அஞ்சாமை’ படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தடுக்கும் வகையில் ‘அஞ்சாமை’ கதை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இந்த படத்தில் உள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே ‘அஞ்சாமை’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இயக்குனர், விதார்த், வாணி போஜன் உள்பட நடிகர் நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments