மோடி எதிர்ப்பு ஹேஷ்டேக்: ஓவியா மீது போலீஸ் புகார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே. அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் ஒரு பக்கம் மோடியை வரவேற்று டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஹேஷ்டேக்கும், இந்திய அளவில் டிரெண்ட் ஆனது
குறிப்பாக #GoBackModi என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா முதன்முறையாக தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓவியாவை அடுத்து வேறு ஒரு சில நட்சத்திரங்களும் இதே ஹேஷ்டேக்கை பதிவு செய்தனர். இந்த நிலையில் பிரதமர் வரும் தினத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்த நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க பாஜக வழக்கறிஞர் அணி காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஓவியாவின் டுவிட்டர் கணக்கை முடக்கவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் பதிவு செய்த ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout