குடும்ப வன்முறை.. நடிகை ஹன்சிகா மீது காவல்துறையில் புகார்..
- IndiaGlitz, [Wednesday,January 08 2025]
நடிகை ஹன்சிகா மீது குடும்ப வன்முறை புகார் காவல்துறையில் வழங்கப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால், ஜீவா உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இந்நிலையில், ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது தாயார் உள்பட குடும்பத்தினர் மீது, அவருடைய சகோதரர் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோட்வானிக்கும் தொலைக்காட்சி நடிகை முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக புறப்படுகிறது.
இந்நிலையில், முஸ்கன் நான்சி ஜேம்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனது கணவர், கணவரின் அம்மா, கணவரின் சகோதரி ஹன்சிகா ஆகியோர் என்னிடம் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார்கள். என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் நான் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடைய விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கேட்கிறார்கள், குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.