'திரௌபதி' படத்திற்கு தடையா? இலவச விளம்பரம் ஆரம்பம்!
- IndiaGlitz, [Monday,January 06 2020]
சமீபத்தில் வெளியான ’திரௌபதி’ படத்தின் டிரைலர் சமூக இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை விமர்சனம் செய்யும் வகையில் இந்த படத்தின் வசனங்கள் இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் இரு பிரிவினர் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது
இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என சென்னை காவல்துறை ஆணையரிடம் பெரியார் திராவிட இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுமீது காவல்துறை எந்தவிதத்தில் நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் செய்வது, கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த போராட்டங்கள் அந்த படத்தின் இலவச விளம்பரமாகவே கருதப்பட்டது அந்த வகையில் ’திரௌபதி’ படத்திற்கும் தற்போது இலவச விளம்பரம் கிடைக்க ஆரம்பித்து விட்டதாக சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்