பிரபல நடிகர் தாக்கியதாக உதவியாளர் சென்னை போலீசில் புகார்

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் தாக்கியதாக அவருடைய உதவியாளர் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், தான் வரவழைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக அவருடைய உதவியாளர் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் வீட்டில் நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகைகள் திருடுபோன விவகாரம் குறித்து பார்த்திபன் தனது உதவியாளர் ஜெயம்கொண்டானிடம் விசாரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்த பார்த்திபன், ' தன் வீட்டில் நகை திருடு போன விவகாரத்தில் தனது உதவியாளர் ஜெயங்கொண்டான் தொடர்பு இருப்பது தெரிந்ததால், இது போன்று பொய்யான புகாரை அளிப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபனிடம் ஜெயங்கொண்டான் கடந்த பத்து ஆண்டுகளாக உதவியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஜல்லி மீன்களால் உடல் ரீதியாக படாதபாடு படும் மீனவர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பலர்,  ஜல்லி மீன்களால் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது...

தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் நியமனம்: விஷால் தரப்பின் அதிரடி நடவடிக்கை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரி என்.சேகர் என்பவரை நியமனம் செய்து, இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் குறித்த முடிவுகளை அவரே எடுப்பார் என அறிவித்தது

கார்த்தியின் 'கைதி' படம் குறித்த முக்கிய தகவல்!

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை அடுத்து அவர் தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன்: பிரபல நடிகை

அரசியலை சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து கற்க விரும்புவதாக பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கமல் பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் உறுப்பினரின் மனைவி எதிர்ப்பு

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை