சனம்ஷெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சனம் ஷெட்டி பிரச்சனை செய்யாத நாள் ஏதாவது ஒன்று உண்டா? என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் தான் பார்வையாளர்கள் உள்ளனர். பாலாஜி உள்பட தினந்தோறும் ஏதாவது ஒரு போட்டியாளர்களுடன் வேண்டுமென்ற பிரச்சனையை உருவாக்கி, தானும் டென்ஷனாகி மற்றவர்களையும் டென்ஷனாக்கி வருகிறார். நேற்று கூட ஆரி சாதாரணமாக கேட்ட சாப்பாடு கொட்டியது குறித்த விவகாரத்தில் டென்ஷனாகி அவருடன் சனம் சண்டை போட்டது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சனம்ஷெட்டியின் பாசிட்டிவ் தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. சனம் ஷெட்டிக்கு இன்று பிறந்தநாள் என்பதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் அவருக்கு இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில போட்டியாளர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது போல் சனம் ஷெட்டியின் பிறந்தநாளும் சிறப்பாக கொண்டாட பிக்பாஸ் ஏற்பாடு செய்வார் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள்ளே அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் அவரது பிறந்த நாளான இன்று அவர் நடித்த திரைப்படமான ’எதிர்வினையாற்றும்’ என்ற படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஏற்கனவே இந்த டிரைலர் குறித்த வீடியோ ஒன்றை சனம்ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே பதிவு செய்திருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சோம்சேகரை ரவுண்டுகட்டி அடிக்கும் ரியோ: கூட்டாளி ரம்யாவும் உடந்தை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வாரம் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதும், இந்த் டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாகவும்

லாக்டவுனுக்கு பின் நடிகைகளின் சம்பளம்: நயன்தாராவுக்கு எவ்வளவு?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை ஈடுகட்ட மாஸ் ஹீரோக்கள்

தீபாவளி விருந்தாக வரும் விஜய்யின் 'மாஸ்டர்': ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஏப்ரல் 9 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தியேட்டரில் பார்த்திருந்தால்.....: சூர்யாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்கள்

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று வயல்வெளியில் அதுவும் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.