ஜப்பானில் ராஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஜப்பானில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள டோக்கியோ சென்ற போது அங்கு விமான நிலையத்தில் ஜப்பான் மக்களின் அன்பை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாலிவுட்டில் நடித்த ’அனிமல்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு கடும் விமர்சனங்கள் இருந்தாலும் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ’புஷ்பா 2’, தனுஷ் உடன் ஒரு பான் இந்திய படம், தமிழில் ’ரெயின்போ’ என சில படங்களில் அவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக டோக்கியோ சென்றார்.
அங்கு அவர் விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவரை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் ’புஷ்பா’ படத்தில் நடித்த ஸ்ரீவள்ளி கேரக்டரின் புகைப்படத்துடன் வரவேற்றதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் ராஷ்மிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
#RashmikaMandanna :
— Pushpa2TheRule 🧢 (@uicaptures) February 29, 2024
India ne kadhu , Japan lo kudaa 🔥🔥 @iamRashmika
This is Rashmika's Rule 👍🏻💪🏻
Rise Above Hate 🫡😎✨
Truly Proud 🌟💥💥
Can't wait #Pushpa2TheRule 😍pic.twitter.com/nGxcXJ1Mr7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments