திருமண கோலத்தில் அஜித்-வித்யாபாலன்: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,April 05 2019]

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்துக்கு மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் கலந்து கொண்டார். இருவரது ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சிகள் 'பிங்க்' படத்தில் இல்லாத ஸ்பெஷல் காட்சிகள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தும், வித்யாபாலனும் திருமண மாலையணிந்து போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டது போல் இருக்கும் ஒரு ஸ்டில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தல அஜித் இளமையுடன் தோற்றமளிக்கும் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.

அஜித் வழக்கறிஞராக நடித்திருக்கும் இந்த படத்தில் வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.