திருமா பதிவிட்ட ஒரு புகைப்படம்....! மனம் உருகிய நெட்டிசன்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தனது தாயாரின் புகைப்படத்தை வெளியிட்டு "மதுரையில் அம்மாவுடன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் டுவீட் செய்து வருகிறார்கள்.
இன்று அம்பேத்கர் அவர்களின் 130-ஆவது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதுரையில் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கூட்டங்களில் கலந்துகொள்ள இருப்பதாகவும் திருமா கூறியிருந்தார். இந்நிலையில் மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விசிக-வினர் விரட்டியடித்தனர். இதன்பின் விசிக தலைவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் இன்று மாலையளவில் சமூக வலைத்தள பக்கங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தனது அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு "மதுரையில் அம்மாவுடன்" என்பதை கேப்ஷனாக போட்டுள்ளார் திருமாவளவன். தாயரின் உடல் சற்று தளர்வுற்று படுக்கையில் உள்ளார், திருமா அவரின் கன்னத்தில் கைகளை வைத்து ஆறுதல் கூறுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இப்புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்தும், உருக்கமான பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
"என்னை அறியாமல் என் கண்ணில் நீர் கொட்டுகிறது எதனால் என்று தெரியவில்லை நம் தாய்க்கு பின் தலைவனை யார் அரவனைப்பார் என்பதனால்?" என்றும், "ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை தலைவா அம்மா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றும், "தத்தினேன் தரையினில் தாங்கியே பிடித்தாள் பாலகன் எனது பால்மேனி நோவினால் பத்தியம் கொள்வாள் பதைபதைத்து நிற்பாள் கண்டவர் கண் படுமோ கண்ணேறு கழிப்பாள்.... நம் தாய்.... மகனாய் அருகிருந்து மனமருந்தாக பயனுருங்கள்" என்றும், "அண்ணா அம்மாவின் உடல் நிலையை அதிக கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள்..அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப விழைகிறேன்...ஜெய் பீம்" என்றும் பல உருக்கமான டுவீட்டுக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மதுரையில் அம்மாவுடன்... pic.twitter.com/vpnFk4Vqfn
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments