ரூ.5 கோடிக்கு வாட்ச் வாங்கிய இந்தியக் கிரிக்கெட் பிரபலம்… அப்படியென்ன ஷ்பெஷல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிகெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் கைகடிகாரம் வாங்கிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அதனுடைய விலையை ஆராய்ந்து பார்த்த ரசிகர்கள் ரூ.5 கோடி எனத் தெரிந்ததும் வியப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய அணியில் விளையாடிவரும் இளம் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவர் எப்படி ஸ்டைலிஷ் ஆக விளையாடுவதில் ஆர்வம் காட்டுவாரோ அப்படியே தனிப்பட்ட வாழ்க்கையை சொகுசாக வாழ்வதிலும் அலாதி ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் தன்னுடைய தம்பியும் இந்திய அணியின் இன்னொரு கிரிக்கெட் வீரருமான க்ருணால் பாண்டியாவுடன் சேர்ந்து மும்பையில் 30 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி தங்கியுள்ளார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல பாலிவுட் பிரபலங்கள் வீடு வாங்கி இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. வீட்டைத் தவிர இவர் பயன்படுத்தும் கார்களும் விலையுயர்ந்ததாகவே இருக்கிறது. லம்போர்கினி ஹுராகோன், ஆடி ஏ6 மெர்சிடஸ் ஏ, எம்.ஜிகி 63 போன்ற கார்களை பயன்படுத்து வருகிறார்.
தற்போது “படெக் பிலிப் நவுடிலஸ் பிளாட்டினம் 5711“ என்ற கைகடிகாரம் ஒன்றை வாங்கியதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு உள்ள பாண்டியா இது முழுக்க முழுக்க பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற எமரால்ட் பயன்படுத்தி செய்யப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்தக் கைகடிகாரம் குறித்த ரசிகர்கள் இணையத்தில் விவாதிக்க தொடங்கிய நிலையில் அதன் விலை ரூ.5 கோடி எனத் தெரியவந்துள்ளது. இதனால் வியப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள் அதன் சிறப்பம்சம் குறித்தும் பேசி வருகின்றனர்.
முதுகுவலி காரணமாக நீண்டகாலம் பவுலிங் செய்யாமல் இருந்த பாண்டியா தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாட உள்ளார். இவரது வருகையை ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com