கொரோனா வார்டில் பணிபுரிந்து வீடுதிரும்பிய நர்ஸ்க்கு ஆரத்தி வரவேற்பு

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை காப்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் மதுரையில் கொரோனா வார்டில் பணி முடித்து வீடு திரும்பிய நர்ஸ் ஒருவருக்கு பொதுமக்கள் கை தட்டியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். மதுரை முத்துப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சுமதி என்ற நர்ஸ் அங்குள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்

தற்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சுழற்சி முறையில் பணியாற்றி வரும் அவர் பணி முடிந்து நேற்று தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அப்பகுதி மக்கள் கைதட்டியும், ஆரத்தி எடுத்தும் நர்ஸ் சுமதியை வரவேற்றனர். கொரோனாவில் இருந்து மக்கள் உயிர்பிழைக்க தன் உயிரை பணயம் வைத்து பணி செய்த அவரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனா விடுமுறையில் 'கொலகொலயாய் முந்திரிக்காய்' விளையாடிய பிரபலம்

கொரோனா விடுமுறை காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் திரையுலகினர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர்.

100ஐ நெருங்கும் ராயபுரம், நெருங்க முடியாத மணலி, அம்பத்தூர்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள்

கனடாவில் துப்பாகி சூடு நடத்திய மர்ம நபர்: பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலி

கனடாவில் போலீஸ் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கொரோனாவுக்கு சென்னை மருத்துவர் பலி: முக ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது என்னென்ன? கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே