தனுஷ்-கவுதம்மேனன் படத்தில் முதன்முதலாக இணையும் பிரபலம்
- IndiaGlitz, [Friday,February 19 2016]
தனுஷ் இரு வேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் இந்த படத்தை அடுத்து அவர் கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியதையும் நேற்று பார்த்தோம். இந்த படத்திற்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தனுஷ்-கவுதம்மேனன் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவு இயக்குனராக Jomon T John என்பவர் பணிபுரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'பிரம்மன்' உள்பட ஏராளமான மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் முதன்முதலாக கவுதம்மேனன் படத்தில் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது.