இன்று தல அஜித்தின் 'வலிமை' அப்டேட்? ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Tuesday,September 21 2021]

இன்று தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்து உள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ‘வலிமை’ படத்தின் வில்லன் கேரக்டரில் நடித்த கார்த்திகேயாவுக்கு பிறந்தநாளை அடுத்து கார்த்திகேயாவின் ‘வலிமை’ போஸ்டர் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் இந்த போஸ்டரை எதிர்நோக்கி மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

சைமா விருது விழாவில் தங்கையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவான சைமா 2021 விருது வழங்கும்

வேறலெவல் பேஷன் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்… ரசிகர்களை ஈர்த்த புகைப்படம்!

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “மகாநடி” திரைப்படத்தில்

ரூ.20 கோடி வரி ஏய்ப்பா? ஐடி ரெய்டு குறித்து விளக்கம் அளித்த நடிகர் சோனு சூட்!

தமிழில் வெளியான “நெஞ்சினிலே”, “மஜ்னு”, “சந்திரமுகி“, “அருந்ததி“ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள்

ஆணுறுப்பை அளக்க முயன்ற சிறுவன்… ஆபத்தில் முடிந்த சம்பவம்!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சிறுவன் தன்னுடைய ஆணுறுப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பி இருக்கிறான்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது