'கிழக்கு வாசல்' என்ற புத்தம் புதிய தொடர்.. திங்கள் முதல் வெள்ளி வரை ஸ்டார் விஜய்யில்..

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

ஸ்டார் விஜய் சேனலில் ’கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் ஸ்டார் விஜய் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ’கிழக்கு வாசல்’ தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாமியப்பன் என்ற குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை அம்சம் கொண்ட இந்த தொடரில் அவரது வளர்ப்பு மகள் ரேணுகா ஒரு சுறுசுறுப்பான பெண்ணாக உள்ளார். அம்மா அப்பா இரண்டு சகோதரர்கள் என பெரிய குடும்பமாக இருக்கும் இந்த குடும்பத்தில் அன்பு அரவணைப்பு ஆகியவற்றை கவனிப்பதில் ரேணுகா கவனமாக இருக்கிறார்.

குடும்பத்தில் சவால்கள் மற்றும் பிரிவினைகள் ஏற்பட்டாலும் தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருக்க பாடுபடுகிறாள். ரேணுகா தனது சொந்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் ஒரு வழக்கறிஞராக பட்டப்படிப்பையும் படித்து முடிக்க ஆசைப்படுகிறார். அவருக்கு உறுதுணையாக அவரது தந்தை சாமியப்பன் இருக்கிறார்.

இவ்வாறு பல்வேறு திருப்பங்களுடன் சுவாரசியமான கதை அம்சத்துடன் கொண்ட ’கிழக்கு வாசல்’ தொடர் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ரேணுகாவாக ரேஷ்மா, சாமியப்பனாக எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த தொடரில் வெங்கட் ரங்கநாதன், அஸ்வினி, ஆனந்த் பாபு, தினேஷ் கோபாலசாமி,அருண், ரோஜா ஸ்ரீ ஆகியோர் நடிக்க உள்ளனர்.

More News

கவின் அடுத்த படத்தில் 2 இளம் நாயகிகள்.. டைட்டில் இதுதானா?

நடிகர் கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை இயக்குனர் இளன் இயக்கி வருகிறார்

12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களைகட்டும் மதுரை.. 'லியோ' இசை வெளியீட்டு தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்  

கடைசியில் நீங்களுமா..? நடிகை காயத்ரி சங்கரின் பிகினி புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை காயத்ரி சங்கர் சமீபத்தில் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அங்கிருந்து அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பிரபலத்தின் இரட்டை குழந்தைகளுடன் விளையாடும் சமந்தா.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ரியாக்சன்..!

பிரபல பின்னணி பாடகி சின்மயி அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுடன் சமந்தா விளையாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' : ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூலும் திருப்திகரமாக இருந்ததாக