சினேகன் வீட்டுக்கு வந்த புது உறவு.. 'துளசி' என பெயர் வைத்த கன்னிகா ரவி..!

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா உட்பட பல திரையுலக பிரமுகர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு சினேகன் மற்றும் கன்னிகா ரவி இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் தங்களது குடும்ப புகைப்படங்கள், ஜாலியான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் அவை வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக காதலர் தினத்தில் ஒரே டிசைனில் உருவாக்கப்பட்ட காஸ்டியூம் அணிந்து இருவரும் எடுத்து போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது சினேகன் வீட்டில் உள்ள மாடு அழகிய கன்னுகுட்டியை ஈன்றுள்ளது. இது குறித்த வீடியோவை சினேகன் மற்றும் கன்னிகா ரவியின் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். இந்த கன்னுக்குட்டிக்கு துளசி என்று கன்னிகா ரவி பெயர் வைத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த கன்னுக்குட்டியை தூக்கி கையில் வைத்து கொஞ்சம் காட்சிகள் அந்த அந்த வீடியோவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.