கொரோனா பெயரில் ஒரு துணிக்கடை: இரண்டு இளைஞர்களின் புதிய முயற்சி

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கோவிட் 19 என்ற பெயரை கேட்டாலே மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் அதே பெயரில் ரெடிமேட் துணிக் கடையைத் தொடங்கி புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராசித், முகமது அஸ்லம் கான் ஆகிய இரண்டு இளைஞர்கள் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கொரோனா பரவல் காரணமாக வேலை கிடைக்காமல் இருந்தனர். இந்த நிலையில் வருமானத்திற்கு என்ன செய்வது என்று யோசித்த இளைஞர்கள் ஆண்களுக்கான ஒரு ரெடிமேட் கடையை தொடங்க முடிவு செய்தனர். இதனையடுத்து அந்த கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த அவர்கள் கோவிட்-19 எனப் பெயரையே வைத்து திறப்பு விழாவையும் நடத்திவிட்டனர்.

கோவிட் 19 என்ற பெயரை இன்னும் பல ஆண்டுகளுக்கு பொதுமக்கள் மறக்க மாட்டார்கள் என்பதால் இந்த பெயரை தேர்வு செய்ததாக அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் இந்த புதிய முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.