கலைப்புலி எஸ்.தாணுவுக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Tuesday,December 29 2020]

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கலைப்புலி தாணு அவர்களின் திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவர் பதவியை அவர் ஏற்கவுள்ளார். தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கும் நிலையில் அந்த பெருமைக்குரிய பதவியை அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்று கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார்

மேலும் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக C, கல்யாண்,C.P.விஜயகுமார்,N.M சுரேஷ், ஆனந்தா L.சுரேஷ், T.P.அகர்வால், ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர் என்பதும், செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவர் பதவியை ஏற்கவிருக்கும் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது