ஏஆர் ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏஆர் ரகுமான் குடும்பத்தினர் சிலர் ஏற்கனவே திரையுலகில் புகழ் பெற்றிருக்கும் நிலையில் அவருடைய குடும்பத்தில் இருந்து புதிதாக ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.
ஏஆர் ரகுமானின் மகன் அமீன் ஒரு பாடகர் என்பதும் அவர் ஒரு சில திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் ஏஆர் ரகுமானின் மகள் கதீஜா, ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ’புதிய மனிதா’ உள்பட ஒரு சில பாடல்களை பாடியுள்ளார். ஏஆர் ரகுமானின் சகோதரி ஏஆர் ரெஹைனா ஒரு இசையமைப்பாளர் என்பதும் அவருடைய மகன் ஜிவி பிரகாஷ் ஒரு இசையமைப்பாளர் என்பது தெரிந்ததே. ஏஆர் ரகுமானின் இளைய சகோதரி பாத்திமா இசை ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் மகள் கதீஜா தற்போது இசையமைப்பாளர் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘சில்லு கருப்பட்டி ’என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்க இருக்கும் ’மின்மினி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments