'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு மூடு விழாவா? விஜய் டிவியில் புது குக்கிங் ஷோ..
Send us your feedback to audioarticles@vaarta.com
’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், பிரியங்கா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்நிலையில், விஜய் டிவியில் புதிய குக்கிங் ஷோ ஒன்று ஆரம்பிக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளதோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி அடுத்த சீசன் தொடருமா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்றது. ஆனால், ஐந்தாவது சீசனின் ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் உள்ளிட்டவர்கள் திடீரென விலகியதையடுத்து, இந்த நிகழ்ச்சி புத்தம் புதிய பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டு, முந்தைய நான்கு சீசன்களில் பெற்ற அதே வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், திடீரென நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது, மற்றும் அவர் பிரியங்கா மீது வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், விஜய் டிவியில் தற்போது ’குக்கிங் விஜய் ஸ்டார்’ என்ற புதிய பெயரில் குக்கிங் ஷோ ஒன்று ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் ஜாக்லின் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 'கலக்கப்போவது யார்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், மீண்டும் இந்நிகழ்ச்சியின் மூலம் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்க இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் அனைவரும் விஜய் டிவி ஸ்டார்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தியது போலவே, இந்த நிகழ்ச்சியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக குக் வித் கோமாளி நிறுத்தப்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com