இன்னொரு தேசிய விருது உறுதி: 'வாத்தி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த 'வாரிசு' பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என ‘வாரிசு’ இயக்குனர் வம்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இதுவரை பெரிய அளவில் பேசப்படாத கல்வித்துறையில் இருக்கும் முறைகேடுகள் குறித்து பேசும் படமாக ‘வாத்தி’ படம் அமைந்துள்ளதால் இந்த படம் நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விஜய் நடித்த ’வாரிசு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி ‘வாத்தி’ படம் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘வாத்தி’ திரைப்படம் தனுஷின் மிகச்சிறந்த உணர்ச்சிவசமான நடிப்பில் உருவாகியுள்ளது என்றும் எமோஷனல் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லுரியின் மிகச்சிறந்த இயக்கத்தில் ஜிவி பிரகாஷின் அசாதாரண இசையில் உருவாகிய ‘வாத்தி’ திரைப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு மிகச்சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது எடிட்டர் நவீன் நூலுக்கு கிடைக்கும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் வம்சிக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
One of the best works of National Award Winning editor @NavinNooli as well. #SirMovie #Vaathi
— Vamsi Kaka (@vamsikaka) February 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments