30 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அதிசயம்! முட்டையிடும் குன்று: விடை தெரியாமல் திணறும் ஆராய்ச்சியாளர்கள்!
- IndiaGlitz, [Wednesday,April 17 2019]
இயக்கையால் நிகழ்த்தப்படும் அதிசய மற்றும் ஆச்சர்ய நிகழ்வுகளுக்கு, பல்வேறு... தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், விடை தெரிந்து கொள்ள முடியவதில்லை. அந்த வகையில் இன்று வரை, ஆராச்சியாளர்களுக்கு புரியாத புதிராய் விளங்கி வருகிறது சீனாவில் அமைந்துள்ள சான் டா யா குன்று.
சீனாவில் உள்ள கைசொவ் மாகாணத்தில் அமைந்துள்ள சான் டா யா குன்று, 30 வருடத்திற்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாக அந்த ஊர் மக்களால் நம்ப பட்டு வருகிறது.
9 அடி உயரமும், 65 அடி அகலமும் கொண்டது சான் டா யா குன்று. சீன மக்கள், இதனை புனித குன்றாக பார்க்கின்றனர். 30 வருடங்களுக்கு ஒரு முறை, இக்குன்று கல் முட்டை இடுவதாக அந்த ஊர் மக்கள் சொல்வது போல், இந்தக் குன்றில், வட்ட வடிவில் பல கல் முட்டைகள் காணப்படுகிறது.
இதனை உடைத்தால் உள்ளே சுண்ணாம்பு பாறைகள் உள்ளது. இந்தக் குன்றை கடவுளாக பார்க்கும் அக்கிராம மக்கள், அனைவருடைய வீட்டிலும், இந்த கல் முட்டைகளை வைத்து பூஜை செய்து வருகிறார்கள்.
ஆனால், இந்தக் குன்றில் எப்படி வட்ட வடிவில் கல்கள் தோன்றுகிறது என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த போதிலும், இதுவரை இதற்கான மர்மம் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இந்த அதிசயக் குன்றை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கு வருகின்றனர். இங்கு வந்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.