மைக்கேல் ஜாக்சனின் இந்திய வருகையைப் பற்றி தெரியுமா? அரிய புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்பதே நம்மில் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இந்தியாவில் அவர் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் என்பதும் அதோடு அந்த இசை நிகழ்ச்சியை கேளிக்கைக்காக மட்டுமல்லாமல் நிதிதிரட்டும் நிகழ்வாக அமைத்து, அந்த நிதியை மாகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு பரிசளித்தார் என்பதும் தற்போது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி ஆட்சியில் இருந்தபோது கடந்த 1996 நவம்பர் 1 ஆம் தேதி பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 1996 முதல் அக்டோபர் 1997 வரை உலகம் முழுவதும் 83 இடங்களில் வரலாற்றுச் சுற்றுப்பயணம் செய்யும் நிகழ்வின் ஒரு பகுதியாக பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
முதலில் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்விற்கு ரசிகர்கள் வருவார்களா? என்றே சந்தேக இருந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மட்டும் 35,000 ரசிகர்கள் வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திக்குமுக்காட செய்துள்ளனர். மேலும் அப்போதே ஒரு டிக்கெட்டின் விலை ரூ.5,000 க்கு விற்கப்பட்டு இருக்கிறது. மைக்கேல் ஜாக்சன் அந்த கான்செட்டில் 17 பாடல்களை பாடியும் நடனம் ஆடியும் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கான கேளிக்கை வரியை அப்போதைய சிவசேனா அரசாங்கம் ரத்து செய்திருந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் வெளியிட்டு இருந்தனர். மேலும் மருந்திற்கு கேளிக்கை வரி வசூலிக்கும் அரசு கேளிக்கை நடனத்திற்கு சலுகை கொடுக்கலாமா? என்று சந்தேகம் எழுப்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிகழ்வுகளும் அரங்கேறின.
இதுபோன்ற நெருக்கடிக்கு மத்தியில் மும்பையில் நடைபெற்ற கான்செட்டில் கலந்துகொண்ட மைக்கேல் ஜாக்சன், தனது நிகழ்ச்சியில் வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு செலவழிக்குமாறு வலியுறுத்தி மாகாராஷ்டிரா அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். இந்த நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
மேலும் மைக்கேல் ஜாக்சான் தனது மும்பை பயணத்தில் பல்வேறு பிரபலங்களை சந்தித்துள்ளார். குழந்தைகளுடன் குதூகலமாகப் பேசி சிரித்த அவர் பிரபல தலைவர் பால் தாக்கரேவின் வீட்டிற்கு சென்று அவர்களையும் மகிழ்வித்து இருக்கிறார். வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout