திருப்பதியில் கொரோனா தொற்று உறுதியான 1,000 பேர் மாயம்… அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Thursday,April 29 2021]
கொரோனா நோய்த்தொற்று சற்றுத் தணிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்துக் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நேரத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போதுவரை 9,164 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. இதனால் பல நோயாளிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த 9,164 பேரில் கிட்டத்தட்ட 845 பேர் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொடுத்த முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கொண்டு தகவல் கொடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. முடியாத பட்சத்தில் அந்தந்த நகராட்சி அலுவலகங்களுக்கு தகவல் கொடுத்து உரிய நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருப்பதி நகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ள ஒரு தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதாவது திருப்பதி கோவிலில் கொரோனா உறுதிச்செய்யப்பட்ட 9,164 பேரில் 1,049 பேர் மாயமாகிவிட்டதாகவும் அவர்கள் கொடுத்த முகவரி மற்றும் தொலைபேசி எண் தவறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,049 பேர் எங்கு இருக்கின்றனர்? இவர்களுக்கு என்ன ஆயிற்று? என்பது போன்ற எந்தத் தகவலையும் உறுதிச் செய்யமுடியாத நிலையில் திருப்பதி நகராட்சி நிர்வாகம் தற்போது 1,049 பேர் மாயமாகி உள்ள வெளியிட்டு இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருநபர் சமூக இடைவெளியின்றி நடமாடினால் குறைந்தது 409 பேருக்கு நோய்த்தொற்றை பரப்புகிறார் என்று உலகச்சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு சென்றபோது கொரோனா உறுதிச்செய்யப்பட்ட 1,049 பேர் மாயமாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.