close
Choose your channels

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா? படம் மாஸ் ஆகத்தான் இருக்குமோ?

Thursday, August 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரான மிஷ்கின் அதன் பின்னர் ’அஞ்சாதே’ ’நந்தலாலா’ ’யுத்தம் செய்’ ’முகமூடி’ ’பிசாசு’ உள்பட ஒருசில வெற்றி படங்களை இயக்கினார். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படங்கள் இயக்குவது மட்டுமின்றி அவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ’மாவீரன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவர் விஜய்யின் ’லியோ’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ’பிசாசு 2’ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வேற லெவலில் மாஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘பிசாசு 2’ படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் மிஷ்கின் நடித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment