எஸ்பிபிக்காக கூட்டுப்பிரார்த்தனை: ரஜினி, கமலின் புதிய முயற்சி
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், அவரது உடல்நிலை திடீரென அபாய கட்டத்திற்கு சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து அவர் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் எஸ்பிபி யின் உடல்நிலை குறித்து தினந்தோறும் அப்டேட்களை அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாடகர் எஸ்பிபி அவர்கள் குணமடைய வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்வதாக ஏற்கனவே ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பாரதிராஜா உட்பட ஒட்டுமொத்த திரையுலகமும் தெரிவித்து உள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஒரு புதிய முயற்சியாக எஸ்பிபி அவர்களுக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, ஏஆர் ரகுமான், வைரமுத்து, பாரதிராஜா ஆகியோர் தங்களது வீடுகளிலிருந்து எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்யவுள்ளனர். இந்த கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
through a mass prayers on 20 August, 6 pm -6:05 PM by playing his song from their respective places. Let's make sure that his voice is heard again. #getwellsoonspbsir
— Diamond Babu (@idiamondbabu) August 19, 2020