close
Choose your channels

'தக்லைஃப்' படத்தில் மாஸ் குத்துப்பாட்டா? யார் யார் ஆடுகிறார்கள்?

Wednesday, May 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் முக்கிய காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தின் ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு மாஸ் குத்து பாட்டு இருப்பதாகவும் இந்த பாடலுக்கு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் போட்டி போட்டு செம டான்ஸ் ஆடி இருப்பதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் ஒரு தொழில்முறை நடனக்கலைஞர் என்பதும், சிம்பு நடனத்திற்காகவே பெயர் பெற்றவர் என்ற நிலையில் இருவரும் ஒரே பாடலுக்கு டான்ஸ் ஆடும் கண்கொள்ளா காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இசை புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த மாஸ் குத்து பாட்டு படத்தின் ஹைலைட் ஆக இருக்கும் என்று கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் தனது படங்களில் பல குத்து பாடல்கள் வைத்துள்ள நிலையில் இந்த பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment