close
Choose your channels

'தளபதி 66' படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

Friday, June 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் முடிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க உள்ளனர் என்றும் அதன்பிறகு சில உரையாடல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

’தளபதி 66’ படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் இரண்டு வெவ்வேறு ஹேர் ஸ்டைலில் அவர் தோற்றமளித்ததில் இருந்து தெரியவருகிறது. வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment