அறுந்த சங்கிலி, மாஸ் புகைப்படம்: என்ன சொல்ல வருகிறார் உதயநிதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரிசையாக பல மாஸ் நடிகர்களின் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்பட பல திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து வருகிறது.
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு ஒரு முக்கிய படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு காலை 11 மணிக்கு இந்த ஆச்சரியமான அறிவிப்பு வெளியாக உள்ளது என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவில் அறுந்த சங்கிலி புகைப்படம் ஒன்று உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் தங்களை யூகத்தின்படி நாளை அறிவிப்பு இதுவாக இருக்கும் என பல திரைப்படங்களின் பெயர்களை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் நாளை காலை வெளியிடவிருக்கும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்து நீங்களும் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
Exciting release announcement coming up, tomorrow at 11:00 AM.
— Red Giant Movies (@RedGiantMovies_) August 31, 2022
Stay tuned.?? pic.twitter.com/kJprK8chth
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments