ரஜினியின் 'கூலி' திரைப்படத்தில் இன்னொரு மாஸ் நடிகர்.. இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லையே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ,சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட ஒரு சிலர் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் நடிகர் நாகார்ஜுனா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நாகார்ஜுனா நடிப்பதாக செய்தி வந்தாலும் அதன் பிறகு அவர் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘கூலி’ திரைப்படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Introducing @iamnagarjuna as Simon, from the world of #Coolie 🔥😎
— Sun Pictures (@sunpictures) August 29, 2024
Wishing the versatile performer King #Nagarjuna a Happy Birthday!💥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv pic.twitter.com/AvI6qmUMnT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com