இதுதாண்டா மரண மாஸ்க்!
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே இருப்பதால் தகுந்த காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய காரணத்தால் வெளியே வந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு என்னதான் சீரிய நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இன்னும் கொரோனாவின் சீரியஸ் தெரியாமல் ஒருசிலர் மாஸ்க் அணியாமல் வெளியே செல்கின்றனர்.
இந்த நிலையில் கோழிக்கடையில் கோழி வாங்கிவிட்டு சைக்கிளில் வரும் ஒருவர் மாஸ்க் இல்லாமல் இருந்த நிலையில் அவரை காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணை செய்கிறார். உடனே அவர் கோழிக்கடையில் வாங்கிய பில்லை வாயில் வைத்து கொண்டு இதுதான் மாஸ்க்’ என்று கூறுகிறார்.
கோழிக்கறி வாங்க காசு இருந்த அவருக்கு ஒரு மாஸ்க் அல்லது கர்சீப் வாங்க காசில்லையா? என காவல்துறை அதிகாரி விசாரணை செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்க் இல்லாமல் தைரியமாக வெளியே வந்தது மட்டுமின்றி கோழிக்கடையில் கொடுத்த பேப்பரை மரண மாஸ்க்காக வைத்திருக்கும் இவர் போன்றவர் இருக்கும் வரை கொரோனாவுக்கு கொண்டாட்டம் தான்
Ithu thaanda marana maaasssskkkk ???? pic.twitter.com/FP9f7DBtgt
— IndiaGlitz - Tamil (@igtamil) May 2, 2020