வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ 50 ரூபாயாக இருந்த வெங்காயம் விலை தற்போது 200 ரூபாய்க்கு மேல் பெற்று விற்பனையாகி வருகிறது. ஏழை, எளிய மக்கள் வெங்காயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதன் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே உள்ளது

இந்த நிலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகநாதன் ரெட்டி தனது மாநிலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூபாய் 25க்கு ஒரு கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வழிவகை செய்துள்ளார்

இதனை அடுத்து உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க ஏழை முதல் பணக்காரர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு வரிசை இருப்பதாகவும் செய்தி கூறப்படுகிறது

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியில் குடிவாடா என்ற இடத்தில் உள்ள உழவர் சந்தையில் வெங்காயம் ரூபாய் 25க்கு வாங்க வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரான சாம்பையா என்ற முதியவர்.

இவர் வெங்காயம் வருவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது. இதனால் அவர் தனது நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வரிசையில் நின்று மற்றவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. வெங்காயம் வாங்க வரிசையில் நின்ற ஒருவர் திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்..!

விலை அதிகமாக உள்ளதால் சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மணமகன்: பெரும் பரபரப்பு

தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டெல்லி தீவிபத்து: உயிர் போகும் கடைசி நிமிடத்தில் நண்பனுக்கு போன் செய்த நபர்! 

டெல்லி தீ விபத்தில் சிக்கிய ஒரு நபர் உயிர் போகும் கடைசி நிமிடத்தில் 'என் குடும்பத்தைக் காப்பாற்று என உருக்கமாக போன் செய்து நண்பருக்கு சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: சென்னையை மிஞ்சிய முக்கிய நகரம்

குழந்தைகள் ஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், இது குறித்து விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு

கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே