'காஞ்சனா 3' படம் பார்க்க சென்றவர் 10 ரூபாய் பிரச்சனையில் கொலை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூரில் காஞ்சனா 3' படம் பார்க்க சென்ற ஒருவர் பத்தே பத்து ரூபாய் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படத்தை பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கில் பார்க்க பரணிதரன் என்பவர் கடந்த வியாழன் அன்று சென்றுள்ளார். அவர் பைக்கை பார்க் செய்தபோது அங்கிருந்த பைக் கட்டணம் வசூலிக்கும் நபர் ரூ.10 கேட்டுள்ளார். ஆனால் பரணிதரன் பைக் கட்டணத்தை தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னொரு திரையரங்க ஊழியரும் வந்து இருவரும் பரணிதரனை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் பரணிதரன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் பரணிதரன் மரணத்திற்கு காரணமாக இரண்டு திரையரங்கு ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பத்து ரூபாய் பிரச்சனையால் விலை மதிப்பில்லாத ஒரு உயிர் பலியாகியிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com