கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற நபர் கைது

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்கச் சென்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ சந்திக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மட்டுமே தகுந்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தும், அவர்களுக்கு தேவையானதை கொடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருசில ஆர்வமிகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்திக்க முயற்சி செய்வதாக அரசின் கவனத்திற்கு வந்ததை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபரை பெரோஸ்கான் என்ற நபர் சந்திக்க சென்றார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

கொரோனாவில் இருந்து மீண்ட 51 பேர்களுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒரு பக்கம் பாதிப்பு அடைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனாவில் இருந்து மீண்டு குணமாகி

8 ஆயிரம் கோடி வீடியோவுக்கு மன்னிப்பு கேட்ட மதுவந்தியின் வேறு சில கேள்விகள்!

சமீபத்தில் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வெளியிட்ட வீடியோ ஒன்றில்  8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி

இதை நான் சொல்லவே இல்லை: ரத்தன் டாடா விளக்கம்

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1500 கோடி கொடுத்து நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருடைய அறிவிப்புக்கு பின் வெளிநாட்டு

8000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடி உதவியா? மதுவந்தி வீடியோவுக்கு நெட்டிசன்கள் ரியாக்சன்

பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற சொன்னார். அதற்கு விளக்கம் கூறிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி

கொரோனா ஊரடங்கில் அசத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள்!!!

கொரோனா  ஊரடங்கில் உலகம் முழுவதும் உள்ள காவல் துறை அல்லாடிக்கொண்டு வருகிறது.