'குக் வித் கோமாளி' பார்த்து குழந்தை பிறந்தது உண்மைதான்: 10 வருடம் குழந்தையில்லாதவரின் உருக்கமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் தன்னிடம் கூறியதாக வெங்கடேஷ் பட் இந்த வார நிகழ்ச்சியில் கூறினார் என்பதையும், அதைக்கேட்டு குக்குகள், கோமாளிகளும் மட்டுமன்றி பார்வையாளர்களும் மிகப் பெரிய ஆச்சரியத்தை அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் அவர்கள் கூறியதை வைத்து பல மீம்ஸ்கள் இணையதளங்களில் பரவி வருவதை அடுத்து 10 வருடம் குழந்தை இல்லாத ஒருவர் தனது அனுபவத்தை கூறி வெங்கடேஷ் பட் அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை என்று தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் நானும் என் மனைவியும் பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தோம். அதன்பிறகு டாக்டரின் அறிவுரைப்படி IVF சிகிச்சை எடுத்துக் கொண்டோம். அப்போது டாக்டர் கூறிய ஒரே விஷயம் பாசிட்டிவ் ஆக இருக்கவேண்டும், முடிந்தவரை நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் குழந்தை நன்றாக வளரும் என்று கூறினார்.
இதற்காக நான் என் மனைவியை கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொண்டேன். அவருடைய ஒரே பொழுதுபோக்காக டிவி பார்ப்பது என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க கூறினேன். வெங்கடேஷ் பட் சார் சொன்னது எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது, அதை பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. ஆனால் என் மனைவிக்கு மன அழுத்தம் இருந்த போது அதை போக்கிய ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
எனக்கு தெரிந்து உடலுறவுக்கும் கருத்தரித்தலுக்கும் உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் அவசியம். அந்த மனவலிமை, மனம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். மனதை சந்தோசமாக வைத்து கொள்ளாமல் மன அழுத்தத்துடன் இருந்தால் குழந்தை பிறக்காது என்பதை எனது அனுபவத்தில் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் வெங்கடேஷ் பட் சொன்னது உண்மைதான் சில மருத்துவர்களும் ஒப்புக்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். IVF சிகிச்சைக்கு கண்டிப்பாக மன அழுத்தம் இருக்கக் கூடாது என்றும் அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க பரிந்துரை செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
https://t.co/s0BRswdGdW still can't manage that stress. திடீர்னு அழுகை ஏதாவது பாப்பாவாக பாத்தா ஏங்கியே சாகனும் போல இருக்கும் . இதுல societal pressure வேற. மறுபடியும் ஒரு ivf அதுவும் failure. சீ போனு ஒரு மனநிலை. All I needed was something to laugh at. 3/n
— Matilda (@SMatildapari) May 28, 2022
Ithu vandhu IVF treatment kaga poravanga bayangarama stress aavanga, successful aaguma aagathanu
— Dr.Sanakyan (@NGS_tweets) May 28, 2022
Antha stress ah control panrathukaga intha show ah paathenu sonnaru
Itha paatha Nala conceive aananga nu sollala avar
So itha right context la eduthukalam
Ethuku unnecessary troll
அந்த பெண் சொன்னது சரி தான்..IVF க்கு எல்லாம் மனநிலை மிக முக்கியம்..மனநிலையை சரியாக வைக்க சிரிக்க ஏதோ ஒரு நிகழ்ச்சி உதவுகிறது என்றால் உதவட்டுமே..என்ன பெருசா troll பண்ணி அதை புடிங்கிற போறோம். நாட்டுல பல வொர்த் இல்லாத ஆட்கள் கொண்டாடப்படும் போது CWC ஐ கொண்டாடலாம்..தப்பு இல்ல(2/2)
— மாடர்ன் திராவிடன் (@moderndravidan) May 29, 2022
A must read thread
— Dr.Sanakyan (@NGS_tweets) May 28, 2022
Those who trolls on Bhat's statement
These r the stress that married couples r facing by families relatives while on IVF treatment
For reliving stress they r watching cwc etc
So Nothing wrong in that#CookWithComali #Cookuwithcomali3 #VenkateshBhat https://t.co/u4dcuztPkr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout