கள்ளக்காதலியுடன் உல்லாசம்: திடீரென நிர்வாணமாக தெருவில் ஓடிய சென்னை வாலிபர்
- IndiaGlitz, [Friday,November 29 2019]
சென்னை வாலிபர் ஒருவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது திடீரென தெருவில் நிர்வாணமான நிலையில் ஓடியது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் ஒருவர் நிர்வாணமாக ஓடியது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த வாலிபர் யார் என்று கண்டுபிடித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
அந்த வாலிபர் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் அப்போது வெளியே யாரோ வந்த சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்து உடை, செல்போனை கூட எடுக்காமல் நிர்வாண நிலையிலேயே பின்பக்கமாக ஓடி விட்டதாகவும் கூறினார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து தனது உடைகளையும் செல்போனையும் எடுக்க மீண்டும் அதே காதலி வீட்டுக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறியதோடு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு சிலர் ஆயுதங்களுடன் சென்னை தெருக்களில் சுற்றித் திரிவதாக சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்த நிலையில் நிர்வாண நிலையில் சென்னை வாலிபர் ஒருவர் தெருவில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.