மனைவிக்கே தெரியாமல் 47 குழந்தைக்கு தந்தையான கணவர்! எப்படி சாத்தியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சில சமயங்களில், உலகில் நடக்கும் சில ஆச்சர்யமான சம்பவங்கள் நம்மை வியப்படைய செய்கிறது. இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியையும் நம்மில் விதைக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் மனைவிக்கே தெரியாமல் கணவர் 47 குழந்தைகளுக்கு பயலாஜிக்கல் தந்தையாகியுள்ள சம்பவம்.
ரெட்டிட், என்கிற சமூக வலைதளம் மூலம் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பலரும், தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பிறருடன் பகிர்ந்து அதற்கான தீர்வை கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெயர் மற்றும் முகம் காட்ட விரும்பாத பெண் ஒருவர், பதிவிட்டுள்ள பதிவில் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது. இருவருக்கும் ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு முன்பே அவருடன் டேட்டிங் சென்ற போது அவர் 'விந்து தானம்' செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவரின் விந்து தானத்தின் மூலம் எத்தனை குழந்தைகள் அவருக்கு பிறந்து உள்ளது, என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டானது.
இதனால் இதுகுறித்து, அவரிடம் கேட்டேன். அவர் கூறிய பதில் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை கடைசியாக மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் படி 47 குழந்தைகள் இவருடைய விந்துவின் மூலம் பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இவரின் இந்த பதிலால், தன்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்ல. சட்டப்படி இந்த குழந்தைகளுக்கு18 வயது ஆனதும் அதன் பயாலஜிக்கல் தந்தை யார் என கூற வேண்டும். ஒருவேளை இப்படி தெரிந்து கொண்ட குழந்தைகள் தங்களைத் தேடி வந்தாள் என்ன செய்வது என குழப்பமாக இருக்கிறது.
எனவே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும், தன்னுடைய முடிவு சரியா? தவறா? என பதில் கேட்டுள்ளார். இவரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com
Comments