ஓடும் ரயிலில் நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவிக்கு வராத சக பயணிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த காசி, பீமா உள்பட பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை சனுஷா. இவர் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் ஏசி கோச்சில் சென்று கொண்டிருந்த சனுஷா, இரவில் பர்த்தில் அயர்ந்து தூங்கியுள்ளார். அப்போது தனது உதட்டை யாரோ பிடிப்பது போல் இருக்கவே திடுக்கென விழித்து பார்த்த சனுஷாவுக்கு தனது உதடை ஒருவர் கையால் பிடித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அலறிய சனுஷா, சக பயணிகளிடம் உதவி கேட்டு குரல் கொடுத்துள்ளார். ஆனால் அனைவரும் தூங்குவது போல் நடித்தனர். இந்த நிலையில் பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து உதவிக்கு வந்த ஒருவர் டிடிஆரை அழைத்து வந்தார். டிடிஆர் நடந்த விஷயத்தை கேட்டறிந்து பின்னர் ரயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். ரயில் அடுத்த ஸ்டேஷன் வரும்வரை பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் தப்பித்துவிடாமல் செல்லும் வகையில் கையை நன்றாக பிடித்து கொண்டிருந்தார் சனுஷா.
ஒருசில நிமிடங்களில் ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் பெயர் ஆண்டோ போஸ் என்பதும், தங்க நகை தயாரித்து விற்பனை செய்யும் அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com