தூத்துகுடியில் ரஜினியை யார்? என கேட்டவர் திருட்டு வழக்கில் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
உலகமே யார் என்று தெரிந்த ரஜினியை அவமதிக்கும் நோக்கத்துடன் ‘நீங்கள் யார்? என கேட்டவர் தூத்துகுடி இளைஞர் சந்தோஷ். தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமடைந்தவர்களை மருத்துவனையில் ஒவ்வொருவரிடம் நலம் விசாரிக்க சென்ற ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? என்று கேள்வி கேட்டவர் சந்தோஷ். இவர் ‘யார் என கேட்டதையும், ’நான் தாம்ப்பா ரஜினி’ என்று ரஜினி பதில் கூறியதையும் ஹேஷ்டேக்க்காக உருவாக்கி ரஜினிக்கு எதிரானவர்கள் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து தங்களுக்கு பணம் கொடுத்தவர்களை திருப்தி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என்றும் போராளி என்றும் கூறிக்கொண்டு வந்த ‘ரஜினியை யார் என கேட்ட வாலிபர் சந்தோஷ் தற்போது இருசக்கர வாகனத்தை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துகுடியை சேர்ந்த ஷ்யாம் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் சந்தோஷின் கூட்டத்தினர் அவரிடமே விற்க இணையதளம் மூலம் அணுகியுள்ளனர். காவல்துறையினர்களுடன் சென்ற ஷ்யாம், சந்தோஷ் மற்றும் அவருடைய திருட்டு கூட்டத்தினர்களை பிடித்து கொடுத்ததை அடுத்து சந்தோஷும் அவரை சேர்ந்தவர்களும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற லெட்டர்பேட் இயக்கத்தை சந்தோஷ் தொடங்கி அந்த அமைப்புக்கு அவரே தலைவர் , செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் டுவிட்டரில் #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments