ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்.. யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் ’எஸ்கே23 ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார் என்பதும் இன்னொரு நாயகியாக கீர்த்தி சனோன் நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘துப்பாக்கி’ படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ’மஜா’ ’தம்பி’ ’பழனி’ ’அரசாங்கம்’ ’போர்க்களம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’எஸ்கே 23’ படத்தில் பிரபல நடிகர்கள் ஒவ்வொருவராக இணைந்து வருவதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

 

More News

'ரத்னம்' படத்திற்கு எதிரான கட்டப்பஞ்சாயத்து.. எனக்கே இப்படி என்றால்..? விஷால் ஆவேசம்..!

'ரத்னம்' படத்தை திரையிட விடாமல் சதி செய்வதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் எனக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் புதுமுக நடிகர்களின் நிலை என்ன ஆகும் என்றும் ஆவேசமாக விஷால் வெளியிட்டுள்ள

கன்னி ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் ! தொட்டதெல்லாம் துலங்கும் ! 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக கன்னி ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை மிகவும் உற்சாகமூட்டும் விதமாக விளக்குகிறார்.

திடீரென தேசிய கட்சியில் இணையும் மன்சூர் அலிகான்.. தாய் கழகத்தில் இணைவதாக அறிவிப்பு..

நடிகர் அன்சூர் அலிகான் ஏற்கனவே இரண்டு அரசியல் கட்சியில் இருந்த நிலையில் அதன் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும், பின்னர் அந்த கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட

யாரையெல்லாம் தாக்கும் இந்த ஹீட் ஸ்ட்ரோக்?

வெயில் அதிக அளவில் இருக்கும் நேரத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்ட்ரோக் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

நடிகை தமன்னாவுக்கு சைபர்செல் போலீசார் அனுப்பிய சம்மன்.. ஐபிஎல் விவகாரமா?

ஐபிஎல் போட்டிகளை செயலியில் ஒளிபரப்புவது குறித்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை தமன்னாவுக்கு சைபர் செல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.