பிணத்தின் கையை சமைத்துக் கொடுத்த அன்பு கணவன்; தலைதெறிக்க ஓடிய மனைவி

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

 

உத்திர பிரதேசத்தில் ஒரு அன்பு கணவர் மனைவிக்காகச் பிணத்தின் கையைச் சமைத்துக் கொடுத்து இருக்கிறார். என்னவென்று தெரியாமல் சாப்பிட்ட மனைவி வாந்தி எடுத்து, பின்பு தலைத் தெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் காய்கறிகளை வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றுள்ளார். தன் மனைவி வருவதற்குள் சமைத்து வைத்து அசத்த வேண்டும் என முடிவெடுத்த ஒரு குடிகார கணவன் ஒரு சடலத்தின் கையை சமைத்து இருக்கிறார். வீட்டிற்கு வந்த மனைவி கணவன் சமைத்ததை என்னவென்று தெரியாமல் முதலில் சாப்பிட்டு இருக்கிறார். ஏதோ இறைச்சி என்று நினைத்தவருக்கு கொமட்டிக் கொண்டு வந்திருக்கிறது. சாப்பிட்டதை முழுவதுவமாக வாந்தியும் எடுத்து இருக்கிறார்.

எடுத்த வாந்தியை பார்த்த போதுதான் அது கை என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அலறிக்கொண்டு வெளியே ஓடி இருக்கிறார். பக்கத்தில் இருந்த காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப் பட்டு இருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அந்த நபரை விசாரித்து இருக்கின்றனர். அந்த நபர் பக்கத்தில் இருந்த கங்கைக்குச் சென்று ஒரு சடலத்தின் கையை எடுத்து வந்து சமைத்ததாக விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். இதைக் கேட்ட காவல் துறையினர் உட்பட பக்கத்தில் இருந்த அனைவரும் உறைந்தனர். பின்னர் அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

More News

'ஓ மை கடவுளே' வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'ஓ மை கடவுளே'. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது

அண்ணன் வந்தா ஆட்டம்பாம்: வைரலாகும் 'வாத்தி' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்ட'ர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி இஸ் கம்மிங்' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரியாக 5 மணிக்கு வெளியாகி இணையதளங்களை

துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி படிக்கும் பெண்..!

இந்த விழாவில் கோவை தெலுங்குப்பாளையாத்தைச்  சேர்ந்த மோனிகா என்பவருக்கு பணிநியமன ஆணையானது வழங்கப்பட்டது. இவர் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா??? காங்கிரஸ்க்கு எதிராகத் திரும்பியது ஏன்??? 

மத்தியப் பிரதேச சட்ட சபையில் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சி தொடருமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்

நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் புதிய தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்