மாஸ்க் போட வலியுறுத்தும் ஏழை சிறுவன், கண்டுகொள்ளாத படித்த பொதுமக்கள்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட திறக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது., அந்தவகையில் கடந்த சில மாதங்களாக வெளியே செல்லாமல் இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கவில்லை என்றும் அதனால் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்களில் பலர் அதனை கண்டுகொள்ளாமல் மாஸ்க் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சென்று வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான தர்மசாலாவில் பொதுமக்களில் பலர் மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சென்று கொண்டிருப்பதை பார்த்த ஏழைச் சிறுவன் ஒருவன் காலில் செருப்பு கூட இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிந்து, போவோர் வருவோரிடம் மாஸ்க் அணியும்படி கையில் ஒரு கம்பை வைத்து கொண்டு கூறுகிறார். ஆனால் அந்த சிறுவனை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கும் நிலையில் அரசு கூறும் விதிமுறைகளை சிறிதும் கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout