மாஸ்க் போட வலியுறுத்தும் ஏழை சிறுவன், கண்டுகொள்ளாத படித்த பொதுமக்கள்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,July 07 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட திறக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது., அந்தவகையில் கடந்த சில மாதங்களாக வெளியே செல்லாமல் இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கவில்லை என்றும் அதனால் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்களில் பலர் அதனை கண்டுகொள்ளாமல் மாஸ்க் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சென்று வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான தர்மசாலாவில் பொதுமக்களில் பலர் மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சென்று கொண்டிருப்பதை பார்த்த ஏழைச் சிறுவன் ஒருவன் காலில் செருப்பு கூட இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிந்து, போவோர் வருவோரிடம் மாஸ்க் அணியும்படி கையில் ஒரு கம்பை வைத்து கொண்டு கூறுகிறார். ஆனால் அந்த சிறுவனை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கும் நிலையில் அரசு கூறும் விதிமுறைகளை சிறிதும் கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.

More News

நடிகையை ஏமாற்றிய வழக்கு....! மணிகண்டனுக்கு கிடைத்த நிபந்தனை ஜாமீன்...!

நடிகை   சாந்தினியை ஏமாற்றிய வழக்கில், மாஜி அமைச்சர் மணிகண்டனுக்க&

'ego' எங்கள பிரிச்சிடுச்சு....! சிம்பு, யுவன் காம்போவில் "தப்பு பண்ணிட்டேன்" டீசர்...!

யுவனின் " U1 ரெக்கார்ட்ஸ்"  தயாரிப்பில்  உருவாகி வரும் புதிய ஆல்பம் பாடல் தான் "தப்பு பண்ணிட்டேன்".

5வது பிறந்த நாளை கொண்டாடிய அட்லி - ப்ரியா அட்லி: வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி மற்றும் அவரது மனைவி பிரிப்ரியா அட்லி தாங்கள் செல்லமாக வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் ஐந்தாவது பிறந்தநாளை

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 98 

முன்னாள் காதலனுடன், கள்ளக்காதல்....! கணவரை கொல்ல தோழன் முயற்சி...!

தன்னுடைய முன்னாள் காதலனுடன், கள்ளக்காதல் வைத்துக்கொண்ட சிறுமி, கணவரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.