close
Choose your channels

தனுஷ் இயக்கும் 2வது படத்தில் பிரபல நடிகர்

Friday, December 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வெற்றிப்படமாக இருந்தது மட்டுமின்றி நல்ல வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இணைந்தது. அதுமட்டுமின்றி தனுஷின் முதல் முயற்சிக்கு பெருவாரியான பாராட்டுக்களும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை தனுஷ் இயக்குவார் என்றும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷூடன் இன்ன்னொரு பிரபல நடிகர் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

தனுஷூடன் நடிக்கும் அந்த பிரபல நடிகர் யார் என்பது குறித்த அறிவிப்பு வரும் புத்தாண்டு தினத்தில் அல்லது அதற்கு பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தனுஷ் இயக்கும் 2வது படம் என்பது மட்டுமின்றி அவர் நடிக்கும் 37வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் தற்போது 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment