பவா செல்லத்துரையை அடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பும் பெண் போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல் நிலையை காரணம் காட்டி பவா செல்லத்துரை வெளியேறிய நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே பவா செல்லதுரை உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறினார். ஒரே வாரத்தில் இருவர் வெளியேறியதால் கடந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரம் கடுமையான டாஸ்க்குகள் வைக்கப்படும் நிலையில் இதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வினுஷாவால் டாஸ்க்கில் சரியாக ஈடுபட முடியவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான அவர் தான் வீட்டை விட்டு வெளியேற போவதாக கேப்டன் யுகேந்திரனிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் யுகேந்திரன் மற்றும் மாயா ஆகிய இருவரும் வினுஷாவுக்கு ஆறுதல் கூறி தொடர்ந்து விளையாடுமாறு வலியுறுத்துகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் 20 நாட்கள் இருந்ததே பெரிய விஷயம் என்றும் இன்னும் சில நாட்கள் நீங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் என்றும் உங்களால் முடியும் என்றும் தன்னம்பிக்கையுடன் விளையாடுங்கள் என்றும் மாயா அவருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
இதனை அடுத்து வினுஷா மனம் மாறினாரா? அல்லது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Vinusha feels demotivated due to her health issues and wants to leave the house. Maya motivates her (1/4).#BiggBossTamil7 pic.twitter.com/lCu2tnsvTL
— Bigg Boss Follower (@BBFollower7) October 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com