தேன் 'நிலவு' செல்ல 20 வயது பெண் தேவை: தொழிலதிபரின் விளம்பரத்தால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனிலவு செல்ல 20 வயதுக்கு மேற்பட்ட இளம்பெண் தேவை என தொழிலதிபர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஜப்பானின் ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து இருக்கிறது என்று போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலியை பிரிந்த ஜப்பானின் தற்போது தனிமையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து தனக்கு 20 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை என்றும் அவர் தனது வாழ்க்கைத் துணையாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நிலவில் குடியேற இவர் ஏற்கனவே பல கோடி ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துள்ளதால் தான் தேர்வு செய்யப்படும் பெண் தன்னுடன் நிலவுக்கும் வரலாம் என்றும் அது உண்மையான ’தேன் நில’வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரத்தை அடுத்து அவருக்கு தேனிலவு செல்ல பல இளம்பெண்கள் விண்ணப்பித்து வருவதாகவும் இவர்களில் ஒருவரை விரைவில் அவர் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொழிலதிபர்களுடன் உண்மையிலேயே நிலவுக்கு தேனிலவு செல்லும் அந்த அதிர்ஷ்டக்கார பெண்மணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
[WANTED!!!]
Why not be the ‘first woman’ to travel to the moon?#MZ_looking_for_love https://t.co/R5VEMXwggl pic.twitter.com/mK6fIJDeiv
— Yusaku Maezawa (MZ) 前澤友作 (@yousuck2020) January 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com