'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான ஐட்டம் பாடல்: ஆடிய தமிழ் நடிகை யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் இடம் பெற்ற ’ஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடி இருந்தார் என்பதும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பயங்கர ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு இணையாக சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு சிரஞ்சீவியுடன் பிரபல தமிழ் நடிகை ரெஜினா டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலுக்கு ’புஷ்பா’ பாடலுக்கு இணையான வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் யூடியூபில் 82 லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் இந்த பாடலை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார் என்பதும், மணிஷர்மா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.