10 லிட்டர் பிராந்தி, ரூ.10 லட்சம் பணம்: ஒரு வேட்பாளரின் வாக்குறுதி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பது என்பது காலங்காலமாக நடந்து வரும் நடைமுறை. வெற்றி பெற்ற பின் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, ஐந்து வருடம் கழித்து மீண்டும் அதே வாக்குறுதியை தரும் வேட்பாளர்கள் இந்தியாவில் அதிகம்.

இந்த நிலையில் திருப்பூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் சேக் தாவூத் என்பவர் வித்தியாசமாக பல்வேறு வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு கொடுத்து வருகிறார். தனது தொகுதியில் உள்ள ஒவ்வொரு  குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் சுத்தமானதாக பாண்டிச்சேரி பிராந்தி பெற்றுத்தருவேன் என்றும், அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போராட்டம் செய்து வரும் நிலையில் இவர் மட்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என டெல்லி வரை சென்று தொடர்ந்து போராடவுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஒரு காரணத்திற்காகவே இவருக்கு குடிமகன்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

More News

46 வருடங்கள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக படத்தில் யோகிபாபு

பழம்பெரும் இயக்குனர் வி.சி.குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். புகழ்மணி இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

விவசாயி உயிருடன் இல்லையா? தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கேள்வி

தேர்தல் ஆணையம் உயிர் உள்ள விலங்குகளின் சின்னத்தை தருவதில்லை என்று கடந்த சில ஆண்டுகளாக முடிவெடுத்துள்ளது.

வரலட்சுமியின் அடுத்த பட சென்சார் தகவல்

கடந்த ஆண்டு நடிகை வரலட்சுமி, விஜய்யின் 'சர்கார்', 'விஷாலின் 'சண்டக்கோழி', தனுஷின் 'மாரி 2' உள்பட ஒருசில வெற்றிப்படங்களில் நடித்த நிலையில்

கமல் கூட்டணி கட்சியின் வேட்பாளரா பவர்ஸ்டார் சீனிவாசன்?

கமல் கட்சியுடன் நேற்று செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி கூட்டணி வைத்த நிலையில் தென்சென்னை தொகுதியின் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக பவர்ஸ்டார் சீனிவாசன் .

கமல் கட்சியுடன் கூட்டணி: இந்திய குடியரசு கட்சிக்கு 4 தொகுதிகள்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனித்து போட்டி என்று அறிவித்த நிலையில்