'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் குறித்த முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது. இதனையடுத்து இந்த படம் இந்தி, தெலுங்கு உள்பட ஒருசில மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் தெலுங்கின் முன்னணி இரண்டு ஹீரோக்களான என்.டி.ஆர். பாலகிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இந்த செய்தியை 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ள ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மறுத்துள்ளது. 'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் தங்கள் மூலம் வந்தால் மட்டுமே அது அதிகாரபூர்வமான செய்தி என்றும், அதுவரை இதுபோன்ற வதந்திகளை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டாம் என்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments