எனக்கு கொரோனா… செத்துடுவேன்… மனைவியிடம் டயலாக் அடித்து விட்டு சின்னவீடு தேடிய கில்லாடி கணவன்!!!

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

எனக்கு கொரோனா வந்துவிட்டது, நான் கண்டிப்பாக உயிர்பிழைக்க மாட்டேன், அதனால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மனைவியிடம் டயலாக் பேசிய கணவர் ஒருவர் கள்ளக்காதலியுடன் வேறு மாநிலத்திற்குத் தப்பிச்சென்ற விவகாரம் மும்பையில் நடைபெற்றிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தவர் மனிஷ் மிஸ்ரா. இவர் தனது மனைவியுடன் நவி மும்பை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜுலை 24 ஆம் தேதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட மிஸ்ரா எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது, நான் உயிர்பிழைக்க மாட்டேன், அதனால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் எனக் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து இருக்கிறார். இதனால் பதறிப்போன அப்பெண் மீண்டும் மிஸ்ராவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்திருக்கிறது.

எனவே தனது கணவனை காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார். அதையடுத்து செல்போனில் கிடைத்த சிக்னலை வைத்து இறுதியாக மிஸ்ரா பேசிய இடத்தைப் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த இடத்தில் மிஸ்ராவின் பைக் மற்றும் ஹெல்மெட் கிடப்பதைப் பார்த்து முதலில் அதிர்ந்து போயுள்ளனர். தொடர்ந்து பக்கத்தில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்த போலீசார் மிஸ்ரா தற்கொலை செய்துகொள்ளாமல் ஒருபெண்ணின் காரில் ஏறிச்செல்வதைக் கண்டுபிடித்து உள்ளனர்.

மேலும், சிசிடி கேமரா காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டதில் மிஸ்ராவிற்கும் இன்னொரு பெண்ணிற்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்திருப்பதையும் கண்டுபிடித்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததும் அதையடுத்து தனியாக குடித்தனம் நடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மும்பை போலீஸ் தற்போது மனிஷ் மிஸ்ராவைத் தேடிக்கொண்டு மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மூக்கு கண்ணாடி கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தருமா? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத பவுலர்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ காட்சி!!!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது மான்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட்டாக்க வாய்ப்பு கிடைத்தும்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையா? தலைமை நீதிபதி தகவல்

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரிந்ததே. இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

விமர்சனங்களுக்கு தக்கப் பதிலடி… சமூகவலைத் தளத்தில் பாராட்டுகளைக் குவித்து வரும் தமிழக முதல்வர்!!!

கொரோனா வைரஸ் பரவல், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு பெரும் தவறிழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள்

10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 10 கிராமங்களை காப்பாற்றிய நடிகர் கார்த்தி!

ஒரு பக்கம் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது சகோதரர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன்