100% இருக்கை அனுமதி என்பது தற்கொலைக்கு சமம்: விஜய், சிம்புவுக்கு ஒரு டாக்டரின் வருத்தமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஒருசில கண்டனங்கள் எழுகின்றன. இந்த நிலையில் மருத்துவர் ஒருவர் தனது முகநூலில் வருத்தத்துடன் செய்த பதிவு இதோ:

என் மதிப்பிற்குரிய விஜய், சிலம்பரசன் மற்றும் தமிழக அரசு ஆகியோர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாங்கள் மிகவும் சோர்வாக உள்ளோம். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறை ஊழியர்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக போராடி மிகவும் சோர்வாக உள்ளோம்.நாங்கள் இந்த வைரசுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் கண்முன் தெரியாத ஒரு வைரஸ் உடன் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றோம்

எங்கள் முன்னால் எந்தவித கேமராவும் இல்லை, நாங்கள் சண்டை பயிற்சி செய்த ஒரு ஹீரோவும் அல்ல. அப்படி இருந்தும் நாங்கள் போராடி வருகிறோம். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது இன்னும் முழுமையாக நீங்காமல் இதனால் தினமும் சிலர் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்பது ஒரு தற்கொலை முயற்சி

100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் முடிவை எடுத்தவர்களோ அல்லது திரைப்பட ஹீரோவோ கூட்டத்தில் வந்து தைரியமாக படம் பார்ப்பதில்லை. வருமானத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம். தொற்று நோய் இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய முடிவு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்
 

More News

சின்னத்திரை சித்ரா கணவர் ஹேமந்த் மீண்டும் கைது: என்ன காரணம்?

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

தஞ்சை தரணியில் பிறந்த ராப் பாடகி ஐக்கிபெர்ரி!

தென்னிந்தியாவின் முதல் பெண் ராப் பாடகர் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜனான ஐக்கிபெர்ரியின் தமிழ் ராப் பாடல்கள் உலக அளவில் பிரபலமாகியுள்ள நிலையில் அவர் தனது டாக்டர் தொழில் மற்றும் ராப் பாடல் குறித்து

இறப்புச் சடங்கில் ஏற்பட்ட மற்றொரு பயங்கரம்… 23 பேர் பரிதாப பலி!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இறப்புச் சடங்கின்போது மயானக்கூரை இடிந்து விழுந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

'மாஸ்டர்', 'ஈஸ்வரனை அடுத்து பொங்கல் விருந்தில் இணையும் தனுஷ் படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'திரைப்படம் வரும் 13ம் தேதியும், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதியும் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ளது என்பதும்

ஒரே வாகனத்தில் வாக்குசேகரிக்கும் ஓபிஎஸ்… இபிஎஸ்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா???

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் அதிகமுக தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறது.